ஆகாஷ் அம்பானிக்காக இங்கிலாந்தில் பூங்கா, துபாயில் சொகுசு வில்லா..?
துபாயில் வெளிநாட்டு மக்கள் குடியேறுவதை அதிகரிக்கும் நோக்கில் பல திட்டங்களை துபாய் அரசு மேற்கொண்டு வருகிறது. சில வருடங்களுக்கு முன்னர் துபாயின் ஆட்சியாளரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை தலைவருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் கோல்டன் விசாவை அறிமுகப்படுத்தினார் இதன்மூலம் உலகளவில் தொழிலதிபர்கள், கலை, அறிவியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விசா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதேபோல, துபாயில் உள்ள சொகுசு வில்லாக்களை வெளிநாட்டினருக்கு விற்கவும் ஆர்வம்காட்டி வந்தது துபாய் அரசு. அந்தவகையில் துபாயின் பாம் ஜூமெய்ராவில் உள்ள சொகுசு வில்லா ஒன்றை முகேஷ் அம்பானி வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக 80 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 640 கோடி ரூபாய்) செலவழிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
இந்த விலையுயர்ந்த வில்லாவை முகேஷ் அம்பானி தனது மகன் ஆனந்திற்காக வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக கடந்த ஆண்டு இங்கிலாந்தில் உள்ள ஸ்டாக் பூங்காவை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியிருந்தது. இதன் மதிப்பு 79 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்த பூங்காவின் உள்ளே ஜார்ஜியா காலத்து மாளிகை ஒன்று இருக்கிறது. இது அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்காக வாங்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், துபாயின் பாம் ஜூமெய்ராவில் உள்ள சொகுசு வில்லா ஒன்றை அம்பானி தனது மகன் ஆனந்திற்கு வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags :