வாரணாசி -தென்காசி ஆச்சர்யமான நிகழ்வு.
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் மாநகராட்சி மன்றத்துடன் கூடிய நகரம். காசி என்றும் பெனாரஸ் என்றும் அழைக்கப்படும் வாரணாசி, கங்கைக் கரையில் அமைந்த இந்நகர், இந்து சமயத்தினரின் ஆன்மிகத் தலைநகராகவும், அனைத்து இந்துக் கலைகளின் காப்பகமாகவும் விளங்குகிறது. முக்தி தரும் ஏழு நகரங்களில் வாரணாசியும் ஒன்று. இந்நகரம் பொ.ஊ.மு. 1800 ஆண்டுகளுக்கு மேல், மக்கள் தொடர்ந்து வாழும் பண்டைய நகரங்களில் ஒன்றாகும். இங்குள்ள காசி விசுவநாதர் ஆலயத்திலுள்ள லிங்கம், சைவ சமயத்தினரின் புகழ் பெற்ற பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றாகும். பண்டைய காலங்களில் கல்விக்கூடங்கள் பல அமைந்து கல்வியிற் சிறந்த இடமாக விளங்கியது வாரணாசி.
வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, அம்மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான எஸ். ராஜலிங்கம் என்பவரிடம், வேட்பு மனு தாக்கசெய்தார். ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ். ராஜலிங்கம், தென்காசி மாவட்டம், மேலக்கடையநல்லூரை சேர்ந்த சுப்பையா என்பவரின் மகன் ஆவார்.கடந்த 2022-ம் ஆண்டு வாரணாசி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார். அவரிடம் பிரதமர் மோடி, வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது எஸ். ராஜலிங்கம் அமர்ந்திருக்க, பிரதமர் மோடி எழுந்து நின்று உறுதி மொழி வாசித்தது தொடர்பான புகைப்படங்கள், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.வடகாசியில் காசி விசுவநாதர் ஆலயம் அமைந்துள்ள வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் தென்காசியில் காசி விசுவநாதர் ஆலயம் அமைந்துள்ள மாவட்டத்தில் பிறந்த அதிகாரியிடம் வேட்புமனுத்தாக்கல் செய்த சம்பவம் ஆச்சரியமான நிகழ்வாகவே கருத்தப்ப்டுகிறது.
Tags : வாரணாசி -தென்காசி ஆச்சர்யமான நிகழ்வு.



















