முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமார்

by Staff / 28-01-2024 01:04:14pm
முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமார்

பீகார் முதல்வராக நிதிஷ்குமார் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கியுள்ளார். இந்த நிலையில், மாலை 9-வது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார். அவர் எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியில் இருந்து வெளியேறி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து மீண்டும் ஆட்சியமைக்கிறார். இந்த கூட்டணியில் பாஜகவுக்கு இரண்டு துணை முதல்வர் பதவியும், சபாநாயகர் பதவியும் வழங்கப்படும் என தெரிகிறது. பாஜகவின் முக்கிய தலைவர்களான அமித் ஷா மற்றும் ஜேபி நட்டா ஆகியோர் இன்று பாட்னாவுக்கு வருகை தருகின்றனர். இன்று மாலையே புதிய அரசு பதவியேற்கும் என கூறப்படுகிறது. 2020ஆம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்த நிதிஷ், 2022-ல் அந்தக் கூட்டணியை முறித்துக் கொண்டார். தொடர்ந்து, ஆர்ஜேடி, காங்கிரஸ் கூட்டணியை உருவாக்கி ஆட்சி செய்து வந்த நிலையில், தற்போது அந்தக்கூட்டணியையும் தற்போது முறித்துள்ளார். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை என்ற போக்கை சரியாக கையாண்டு வருகிறார் நிதிஷ்.

 

Tags :

Share via