பட்டா மாறுதலுக்கு ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி. ஏ. ஓ. , கைது

by Staff / 18-08-2024 01:12:22pm
பட்டா மாறுதலுக்கு ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி. ஏ. ஓ. , கைது

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த ஆலகிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன், 40; கட்டளை கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். அதே கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ், 43; இவர், தனது தந்தை பெயரில் உள்ள இரண்டு ஏக்கர் நிலத்தினை தன் பெயரில் பட்டா மாறுதல் செய்ய வி. ஏ. ஓ. , லட்சுமணனை அணுகினார். அவர், 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் பட்டா மாறுதலுக்கு கையெழுத்து போடுவேன் என கூறியுள்ளார். இதுகுறித்து யுவராஜ், விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் செய்தார். அதனைத் தொடர்ந்து நேற்று போலீசார் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய 25 ஆயிரம் ரூபாயை யுவராஜ் கிராம நிர்வாக அலுவலர் லட்சுமணனிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், லட்சுமணனை லஞ்சப் பணத்துடன் பிடித்து கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via