"தமிழகத்தில் யாருக்கும் குரங்கம்மை இல்லை" - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, “தமிழகத்தில் குரங்கம்மை நோய்த் தொற்றால் இதுவரை யாரும் பாதிக்கப்படவில்லை. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையங்களிலேயே பரிசோதனை செய்யப்படுகிறது. ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
Tags :