காரில் சென்ற பெண்கள் விரட்டப்பட்ட விவகாரம் கல்லூரி மாணவர் உள்ளிட்ட 5 பேர் கைது

by Editor / 31-01-2025 10:49:14am
காரில் சென்ற பெண்கள் விரட்டப்பட்ட விவகாரம் கல்லூரி மாணவர் உள்ளிட்ட 5 பேர் கைது

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் காரில் சென்ற பெண்கள் விரட்டப்பட்ட விவகாரத்தில் அப்போது பயன்படுத்தப்பட்ட கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தேடப்பட்டு வந்தவர்களில் ஒரு கல்லூரி மாணவர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக சென்னை ஈசிஆர் சாலையில் கார் சேஸிங் காட்சிகளைப் பற்றி பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கானத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இளம்பெண்கள் சென்ற காரை இரு எஸ்யுவி கார்கள் மறிக்கும் காட்சியும், அதில் இருந்து பெண்களின் காரை நோக்கி வேகமாக ஒரு இளைஞர் ஓடி வரும் காட்சியும் இடம்பெற்றிருந்தது. அதைப் பார்த்து அப்பெண்கள் அலறும் காட்சிகளும் சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் காண்போரை கதிகலங்கச் செய்தன.இதன் தொடர்ச்சியாக பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களின் கண்டணத்தைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

 

Tags : காரில் சென்ற பெண்கள் விரட்டப்பட்ட விவகாரம் கல்லூரி மாணவர் உள்ளிட்ட 5 பேர் கைது

Share via

More stories

Logo