கல்லூரிகள் மாணவர் சேர்க்கையின் போது 69 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் அமைச்சர் பொன்முடி

by Staff / 14-06-2022 05:24:22pm
கல்லூரிகள் மாணவர் சேர்க்கையின் போது 69 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் அமைச்சர் பொன்முடி

 அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையின் போது 69 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என அமைச்சர் பொன்முடி அறிவுறுத்தியுள்ளார். பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி பயோடெக் படிப்பிற்கு பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என பல்கலைக்கழகம் அறிவித்த நிலையில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் பேட்டி அளித்த போது இந்த ஆண்டு கல்லூரிகளில் முழு படம் நடத்தப்படும் என்றார்.

 

Tags :

Share via