அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு அனுமதி அளித்தது சென்னை உயர்நீதி மன்றம்
அ.தி.மு.க பொதுக்குழு-செயற்குழுக்கூட்டம் சென்னை வானகரத்திலுள்ள ஸ்ரீ வாரு வெங்கடாஜபதி மாளிகையில்23.6.2022 வியாழக்கிழமை நடைபெறுவதாக ஒருங்கிணைப்பாளர் ஒ.பி.எஸ்- இணைஒருங்கிணைப்பாளர் இருவரும் கூட்டாக இணைந்துகையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில்,தீடிரென ஒற்றைத்தலைமைக்கோரிக்கை சிலரால் முன்வைக்கப்பட்டது.அதனால்,கடந்த பத்து நாட்களுக்கு மேலாக அ.தி.மு.க.விற்குள் ஓர் அசாதாரண சூழல் உருவாகியது.இரு தரப்பும் தங்களது ஆதரவாளர்களைத்திரட்டுவதும் சந்திப்பதும் விவாதிப்துமான சம்பவங்கள் அரங்கேறின.இருதரப்பு சமாதானபேச்சுகள் முன்னாள் அமைச்சர்களால் முன்வைக்கப்பட்டன. ஒ.பி.எஸ். தரப்பு பொதுக்குழுவுக்குத்தடைகோரி உரிமையியல் நீதி மன்றம்.உயர்நீதி மன்றம் சென்றனர்.இன்று கிட்டத்தட்ட மூன்று மணி நேரஇருதரப்பு வாதங்களைக்கேட்ட, பின்னர் உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அ.தி.மு.க பொதுக்குழுவுக்குஅனுமதி அளித்து தீர்ப்பளித்தார்.வேறு எந்த நிபந்தனைகளையும் குறிப்பிடவில்லை.முழுமையான தீர்ப்பு இணையத்தில்பதிவேற்றப்பட்ட பின்பே தெரிய வரும்.உரிமையியல் நீதிமன்றமும் தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது
Tags :