திருச்சியில் 234 தொகுதிக்கும் வேட்பாளர்களை அறிவிக்கிறது, நாம் தமிழர் கட்சி.

by Admin / 20-02-2026 11:29:05am
 திருச்சியில் 234 தொகுதிக்கும் வேட்பாளர்களை அறிவிக்கிறது, நாம் தமிழர் கட்சி.

 திருச்சியில் 234 தொகுதிக்கும் வேட்பாளர்களை அறிவிக்கிறது நாம் தமிழர் கட்சி

திருச்சியில் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு- 2026 எனும் தலைப்பில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளுக்கும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட உள்ளது. திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஆலம்பட்டி புதூரில் நடைபெறும் இந்த மாநாட்டில் தேர்தல் அறிக்கைக்கு பதிலாக நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் எத்தகைய நிர்வாக மாற்றங்களை கொண்டு வரும் என்ற ஆட்சி வரைபடத்தை வெளியிட உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பரப்புரை பயணத்தை திருச்சி மாநாட்டில் இருந்து தொடங்க உள்ளதாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். சீமான் போட்டியிடும் தொகுதியையும்  மேடையில் அறிவிக்க உள்ளார். காரைக்குடி அல்லது சிவகங்கை தொகுதியில் போட்டியிடலாம் என்று தகவல்.

 

Tags :

Share via

More stories

Logo