தெலங்கானா வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 45 ஆக உயர்வு

தெலங்கானா: ஹைதராபாத் மருந்து தொழிற்சாலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. பாஷமெளரமில் உள்ள சிகாச்சி இண்டஸ்ட்ரீஸில் ஒரு பாய்லர் வெடித்ததில் இந்த விபத்து ஏற்பட்டது. விபத்து நடந்த நேரத்தில் தொழிற்சாலையில் 98 பேர் பணிபுரிந்து கொண்டிருந்தனர். இதில், 35 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இறந்தவர்களில் பெரும்பாலோர் மேற்குவங்கம் மற்றும் பீகாரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதற்கிடையில், முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இன்று விபத்து நடந்த இடத்தைப் பார்வையிடவுள்ளார்.
Tags :