மனித உரிமை ஆணையம் விசாரணை - நயினார் கடிதம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில், கோயில் காவலாளி அஜித் குமார் போலீஸ் விசாரணையில் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அவரின் மரணத்துக்கு நீதிவேண்டி பாஜக, அதிமுக, விசிக, நாதக, தவெக உள்ளிட்ட பல கட்சிகள் தங்களின் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன. இதனிடையே, இவ்வழக்கு குறித்தும், கடந்த 4 ஆண்டுகளில் நடந்த 25 கஸ்டடி மரணங்கள் குறித்தும் தேசிய மனித உரிமை ஆணையம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடிதம் எழுதி இருக்கிறார்.
Tags :