கர்னல் ஜான் பென்னிகுயிக் சிலை இங்கிலாந்து நாட்டில் தமிழக அரசின் சார்பில் நிறுவப்படும்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

by Editor / 15-01-2022 05:16:20pm
 கர்னல் ஜான் பென்னிகுயிக் சிலை இங்கிலாந்து நாட்டில் தமிழக அரசின் சார்பில் நிறுவப்படும்- முதல்வர்  மு.க.ஸ்டாலின்

முல்லைப் பெரியார் அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களின் சிலை, அவரின் சொந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகரில் தமிழ்நாடு அரசின் சார்பில் நிறுவப்படும் எனவும்,தமிழக உழவர்களின் வாழ்வு செழிக்க முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களின் பிறந்தநாளான இன்று, அவரது நினைவைப் போற்றுவோம் என்றும் தமிழக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுக் நினைவைப் போற்றும் வகையில் தேனி மாவட்டம், கூடலூர் லோயர்கேம்ப் பகுதியில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குச் சொந்தமான இடத்தில் 2500 சதுரடி பரப்பளவில் சுமார் ரூ.1.25 கோடி செலவில் வெண்கலத்திலான பென்னிகுயிக் உருவச் சிலையுடனான மணிமண்டபம் ஒன்றை  ஜனவரி 15, 2013 ல் அன்றைய தமிழக முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதா இருந்தபோது அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
 கர்னல் ஜான் பென்னிகுயிக் சிலை இங்கிலாந்து நாட்டில் தமிழக அரசின் சார்பில் நிறுவப்படும்- முதல்வர்  மு.க.ஸ்டாலின்
 
Tags :

Share via
Logo