முதலமைச்சர் மு. க .ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதாக- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிகுற்றச்சாட்டு
திண்டுக்கல்லில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் மு. க .ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால் தான் அவர் நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடரையும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவையும் விமர்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசு மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வருவதை ஸ்டாலின் எதிர்ப்பது அவரது தேர்தல் பயத்தை காட்டுகிறது என்றும் இந்த மசோதாவிற்கு கிடைக்கும் மக்கள் ஆதரவை பார்த்து அஞ்சும் திமுக தலைமை மக்களின் கவனத்தை திசை திருப்பவே தேவையற்ற குழப்பங்களை விளைவிப்பதாகவும் 33 சதவீத இட ஒதுக்கீடு என்பது நீண்ட கால கோரிக்கை இதை நிறைவேற்ற முன்வரும் மத்திய அரசு நடவடிக்கையை சாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி ஜெயலலிதா முன்னோடியாக திகழ்ந்தார். ஆனால் தற்போது பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்தை திமுக எதிர்ப்பது துரதிஷ்டவசமானது என்றும் அவர் விமர்சனம் செய்துள்ளதோடு இந்த மசோதா தொகுதி மறு வரையறையை அடிப்படையாகக் கொண்டுள்ளதால் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் அபாயம் உள்ளதாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Tags :



















