பீஸ்ட் படத்திற்காக பூஜா ஹெக்டே டான்ஸ் ரிகர்சல்
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்ற நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படப்பிடிப்பில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே கலந்து கொள்ளும் காட்சிகள் படமாக்கப்படும் என்றும் குறிப்பாக ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளதாகவும்செய்திகள் கசிந்துள்ளது.
இதற்காக பிரம்மாண்ட செட் ஒன்று தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பீஸ்ட் படத்திற்காக டான்ஸ் ரிகர்சல் செய்து வருவதாக புகைப்படங்களுடன் ஒரு தகவல் தெரிவித்துள்ளார்.
Tags :













.jpg)





