இஸ்ரேலும் ஹமாசும் காசா அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக- அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

by Admin / 10-10-2025 02:44:18am
 இஸ்ரேலும் ஹமாசும் காசா அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக- அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

 இஸ்ரேலும் ஹமாசும் காசா அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவுத்துள்ளார். இதனால் இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி 48 பணய கைதிகளை விடுவிப்பர். . அதேபோன்று, இஸ்ரேல் பிடித்து வைத்திருக்கும் கைதிகளும் விடுவிக்கப்படுவர் .இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி போர் நிறுத்தப்பட்டு 72 மணி நேரம் ஆகி உள்ளது. ..ஹமாஸ் தங்களிடம்  உயிருடன்உள்ள 20  பணயக் கைதிகளை விடுவிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இஸ்ரேல் உடனான போர் முடிவுக்கு வந்து விட்டதாக அமெரிக்க மற்றும் பிற நடுநிலையாளர்களிடமிருந்து போராளி குழுவுக்கு உத்தரவாதங்கள் அளிக்கப்பட்டுள்ளன.. போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் காசாவில் இப்போதைக்கு இருக்க சூழ்நிலையில் அங்கு வசிக்க முடியாத ஒர் சூழல் நிலவுவதாக சொல்லப்படுகிறது.. அமெரிக்கா, மக்கள் வாழ்வதற்கான ஒரு சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கும் என்று ட்ரம் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

 

 

Tags :

Share via