5 வயது சிறுமியை 7 வயது சிறுவன் பலாத்காரம் செய்த பயங்கரம்

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் டெஹாட் மாவட்டத்தில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 7 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மகள் விளையாடச் சென்ற போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக ஐந்து வயது சிறுமியின் தாய் கூறுகிறார். இதன் அடிப்படையில் அக்பர்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஐபிசி 376 மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமிக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அந்த அறிக்கை பலாத்காரம் நடந்ததை உறுதி செய்தது. இதனையடுத்து போலீசார் சட்ட நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.
Tags :