சாலையோரம் கட்டப்பட்ட கோவில் இடித்து அகற்றம்
கோவில்பட்டி பிரதான சாலையான லட்சுமி மில் பஸ் நிறுத்த பகுதியில், அனுமதியின்றி கோவில் கட்டப் பட்டுள்ளதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த பகுதிக்கு சென்று வருவாய் ஆய்வாளர் ராஜசேகரன், கிராம நிர்வாக அலுவலர் ராஜலட்சுமி ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது அங்கு அனுமதியின்றி கோவில் கட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அனுமதியின்றி கட்டப்பட்ட கோவிலை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.
தகவல் அறிந்த கோவில்பட்டி இந்து ஆட்டோ முன்னணி நகரச் செயலர் ரவிகுமார், பா. ஜ. க. ஒன்றியத் தலைவர் கந்தசாமி, இந்து முன்னணி நிர்வாகி ராஜா ஆகியோர் அந்த இடத்திற்கு சென்று அகற்றும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அதையடுத்து கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கயற்கரசி தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு சென்று அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரவிகுமார் உள்ளிட்ட 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்த கோவில் இடித்து அகற்றப்பட்டது.
Tags :