ஆட்டோ ஓட்டுநர் கல்லால் அடித்து கொலை
மதுரை நேதாஜிசாலை பகுதியில் ஆட்டோவை நிறுத்தி ஆள் ஏற்றிச் செல்வதில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநர்கள் இண்டு பேர் சேர்ந்து கல்லால் அடித்து எம். கே புரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் (45) என்பவரை கொலை செய்து உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த திலகர் திடல் போலீசார் உடலை கைபற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் இரண்டு ஆட்டோ ஓட்டுநர்களை இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :



















