இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே மது பானம்
நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 65 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். சுமார் 3 லட்சம் பேர் வரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு வருபவர்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டால் மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என போர்டு எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்து கடைக்கு வந்த குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், தடுப்பூசி செலுத்ததாத நபர்கள் மது வாங்க முடியாமல் தவித்தனர்.
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், "பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. மேலும், டாஸ்மாக் கடைக்கு மதுபானம் வாங்க வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அதுபோல், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்" எனக் கூறினர்.
Tags :