வட மாநில தொழிலாளி கிணற்றில் விழுந்து பலி

திருமங்கலம் அருகே ஜார்கண்ட் மாநில சிம்டேகா பகுதியைச் சேர்ந்த சந்திப் டெத் வயது 35 இவர் திருமங்கலம் அருகே கூடக் கோயில் சரகம் திருமால் பகுதியில் உள்ள கல்குவாரியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த சில தினங்களாக அவர் மனநிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது நேற்று மாலை அப்பகுதியில் உள்ள தோட்டத்து கிணற்றில் சந்தீப் தவறி விழுந்துவிட்டார் இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்க முயற்சித்தனர் இருப்பினும் 100 அடி ஆழம் உள்ள கிணறு என்பதால் அவர்களால் மீட்க முடியவில்லை. இதை அடுத்து கள்ளிக்குடி தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் சந்தீப் டெத் பரிதாபமாக இறந்துவிட்டார் தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்பு கிணற்றிலிருந்து அவரை உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். இச்சம்பவம் குறித்து கூடக் கோவில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :