15 வருடங்களுக்கு பிறகு முன்னாள் பிரதமர் கைது

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா, ராணுவ புரட்சி மூலம் ஆட்சி கவிழ்க்கப்பட்டு 15 ஆண்டுகள் நாடு கடத்தப்பட்ட நிலையில், மீண்டும் நாடு திரும்பிய போது கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்து வந்தவுடன் உடனடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஊழல் வழக்கில் அவருக்கு எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பின்னர் அவர் பாங்காக் சிறைக்கு மாற்றப்பட்டார். பாதுகாப்பு காரணங்களுக்காக 2008-ல் நாட்டை விட்டு வெளியேறினார். நாட்டின் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தென் மாகாணங்களில் வன்முறையைத் தூண்டியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
Tags :