புலி தாக்கி இளைஞர் பலி

by Editor / 27-03-2025 02:24:19pm
புலி தாக்கி இளைஞர் பலி

உதகை அருகே புலி தாக்கியதில் பழங்குடியின இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று  வழக்கம்போல எருமைகளை மேய்க்கச் சென்ற கேந்தர் குட்டன் மாலையில் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், இன்று அதிகாலை அவரது உடல் அருகிலுள்ள வனப்பகுதியில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது. இதையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய வனத்துறையினர் புலி தாக்கி கேந்தர் குட்டன் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
 

 

Tags :

Share via