இந்தியா-சீனா எல்லை விவகாரம்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

by Staff / 21-12-2022 02:51:18pm
இந்தியா-சீனா எல்லை விவகாரம்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

இந்தியா-சீனா எல்லைப் பிரச்னையை வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டம் நடத்தினர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்தியா-சீனா எல்லைப் பிரச்னைக்கு பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என்றும், அவைக்கு வர வேண்டும் என்றும் கோரி இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கிடையில், எல்லைப் பிரச்னைகள் குறித்து விவாதிக்குமாறு மக்களவையில் காங்கிரஸ் எம்பிக்கள் மணீஷ் திவாரி மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகியோர் கேட்டுக் கொண்டனர். இதை குறிப்பிட்டு உறுப்பினர்கள் அவசர தீர்மானத்திற்கு நோட்டீஸ் கொடுத்தனர்.காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் கூட்டம் இன்று நடைபெற்றது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து எம்பிக்களும் கலந்து கொண்டன

 

Tags :

Share via