ஆசிரியரிடம் ரூ.500 உதவி கேட்டார் கிடைத்தது 55 லட்சம்

கேரளாவில் சுபத்ரா (55) என்ற பெண்ணின் கணவர் ஆகஸ்ட் மாதம் இறந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் இறந்ததால், குழந்தைகளுக்கு உணவளிப்பதில் சிரமம் ஏற்பட்டது. சுபத்ரா தனது மகனின் வகுப்பு ஆசிரியரிடம் ரூ.500 உதவி கேட்டார். இதனால் ஆசிரியர் சுபத்ராவிடம் ரூ.1000 கொடுத்தார். அதுமட்டுமின்றி, சுபத்ராவின் குடும்பத்தின் நிலையை விளக்கி முகநூலில் ஒரு போஸ்ட் போட்டார் ஆசிரியர். வங்கி விவரங்களை குறிப்பிட்டு உதவுமாறு கூறப்பட்டது. இந்த பதிவு வைரலானதால், சுபத்ராவின் குடும்பத்திற்கு ரூ.55 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. இந்தப் பணத்தில் தனது குடும்பப் பிரச்னைகள் தீரும் என்று சுபத்ரா கூறினார்.
Tags :