அமலாக்கத்துறை நடத்தும் இந்த சோதனை வரவிருக்கும் தேர்வுகளை குறிவைத்து நடத்தப்படுவதாகமம்தா பானர்ஜி குற்றம் சாட்டு
கொல்கத்தாவில் பிரதீப் ஜெயின் இல்லத்தில் ஐ-பி.எஸ்.சி அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையின் போது மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திடீரென பிரதிக் ஜெயினின் இல்லத்திற்கும் சாட்டில் உள்ள ஐ-பி.எஸ்.சி அலுவலகத்திற்கும் நேரில் சென்று அங்கிருந்த சில முக்கிய கோப்புகள் மற்றும் ஹார்ட் டிஸ்க்களை அவர் கையோடு எடுத்துச் சென்றார். அமலாக்கத்துறை நடத்தும் இந்த சோதனை வரவிருக்கும் தேர்வுகளை குறிவைத்து நடத்தப்படுவதாகவும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளதோடு தனது கட்சியின் வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் வியூகங்களை திருட மத்திய அரசு முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார் .நிலக்கரி கடத்தல் தொடர்பான பணமோசடி வழக்கின் ஒரு பகுதியாகவே இந்த சோதனை நடத்தப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது .மேலும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி விசாரணையில் தலையிட்டு ஆதாரங்களை எடுத்துச் சென்றதாக கூறி அமலாக்கத் துறை தரப்பு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.
Tags :



















