திரண்ட தொண்டர்கள் திணறிய திருச்சி.

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சித் தொடங்கிய தமிழ் திரைத்துறையில் உச்ச நடிகர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி அரியணை ஏறும் இலக்குடன் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
2 மாநாடுகள் மூலம் மட்டுமே தொண்டர்களை சந்தித்த அவர் திருச்சியில் இருந்து தனது அரசியல் பரப்புரை பயணத்தை இன்று தொடங்குகிறார். அதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக இன்று காலை திருச்சி வந்தடைந்தார்.திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பரப்புரை செய்கிறார்.
விஜயின் பரப்புரை பயணத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளித்துள்ள நிலையில், காவல்துறை கட்டுப்பாடுகளை கட்சியினர் ராணுவக் கட்டுப்பாடுடன் பின்பற்ற வேண்டுமென விஜய் வலியுறுத்தியுள்ளார்.இந்த நிலையில் இன்று காலை திருச்சி வந்தடைந்த தவெக தலைவர் விஜய்யை வரவேற்க விமானஇளையத்தில் அவரது கட்சித்தொண்டர்கள் திரண்ட நிலையில் விமானஇளைய தடுப்புக்களை தள்ளி முந்தியத்து சென்றதால் தடுப்புக்கள் சேதமடைந்தன.இதன் தொடர்ச்சியாக அவர் தயாராக இருந்த பிரச்சார வாகனத்தில் புறப்பட்டார். வழிநெடுக தொண்டர்கள் மலர் தூவி வரவேற்றனர். விஜய் வாகனத்திற்கு முன்னும் பின்னும் தொண்டர்கள் அணிவகுத்து செல்வதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் விஜய் வாகனம் ஊர்ந்து செல்லும் நிலையே உள்ளது. விமான நிலையத்தில் இருந்து அவரை மக்களை சந்திக்கும் பகுதி 5 கி.மீ தூரத்தில் உள்ள மரக்கடை பகுதிக்கு செல்ல தாமதம் ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Tags : திரண்ட தொண்டர்கள் திணறிய திருச்சி