அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இணையவழி விண்ணப்பம் வினியோகம் துவங்கியது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 2022-23-ம் கல்வி ஆண்டில், அனைத்து துறையிலும் இளம் மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்ப வினியோகம் தொடங்கியது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் பல்வேறு பட்டப்படிப்புகள் மற்றும் விண்ணப்பங்கள் ஆகியவற்றின் விவரங்களை www.annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட இணையவழி விண்ணப்பங்கள் வருகின்ற 08.08.2022 அன்று மாலை 05 மணிக்குள் சமர்ப்பிக்கப்படவேண்டும் என கல்லூரியின் துணைவேந்தர் கதிரேசன் தெரிவித்துள்ளார்.
Tags : Online application distribution has started in Annamalai University.