சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை... வீடியோ எடுத்து மிரட்டல்

by Staff / 03-10-2022 05:16:36pm
 சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை... வீடியோ எடுத்து மிரட்டல்

ராஜஸ்தானில் அல்வார் மாவட்டத்தில் கடந்தாண்டு டிசம்பர் 31ம் தேதி கோதாரா பகுதியை சேர்ந்த சாகில் 17 வயது சிறுமியை தொலைபேசியில் அழைத்து அவரது ஆபாச படங்கள் தன்னிடம் இருப்பதாக கூறி வரழைத்துள்ளார். பின்பு, அச்சிறுமியின் கிராமத்தை சேர்ந்த அர்பாஸ், ஜாவித், முஸ்தாகீம், தலீம், சல்மான், அக்ரம், சாகில் உள்ளிட்ட 8 பேர் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், அதனை வீடியோவாக படம் பிடித்ததனர். பாதிக்கப்பட்ட சிறுமியை மிரட்டி, அவரது ஆபாச வீடியோவை இணையதளத்தில் வெளியிடாமல் இருக்க ரூ.50,000 கேட்டு பணம் பறித்துள்ளனர்.

இதையடுத்து, சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், போக்சோ, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் அவர்கள் 8 பேர் மீதும் கடந்த 29ம் தேதி வழக்குப் பதியப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய அக்ரம் நேற்று கைது செய்யப்பட்டதாக கிஷன்கர் காவல் நிலைய போலீசார் தெரிவித்தனர்.

 

Tags :

Share via

More stories