லாரி மீது வேன் மோதி 6 பேர் உயிரிழப்பு

by Staff / 06-09-2023 12:18:07pm
லாரி மீது வேன் மோதி 6 பேர் உயிரிழப்பு

சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த சின்னக்கவுண்டனூர் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் ஒன்று மோதி மிகப்பெரிய கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒரு வயது குழந்தை சஞ்சனா உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து சம்ப இடத்திற்கு விரைந்த போலீசார் அனைவரின் உடல்களையும் மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via
Logo