முதலமைச்சர் ஓணத்திருநாள் வாழ்த்துச்செய்தி

மலையாள மண்ணின் மக்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் எழுச்சியோடும் மகிழ்ச்சியோடும் கொண்டாடும் பண்பாட்டுப்பெருவிழாவான திருவோணம் நாளை(செப்டம்பர்-8) கொண்டாடப்பட இருக்கிறது .நல்லரசு புரியும் வேந்தனை வஞ்சகத்தால் வீழ்த்தினாலும் ,வரலாற்றிலும் மக்கள் மனங்களிலும் அவன்புகழ் என்றும்மறையாது என்பதை இன்றளவும் எடுத்துக்காட்டும் நாள் ஓணம் திருநாள் என்றும் கேரளமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடி ஒற்றுமையின் சிப்பை உணர்த்தும் சமூக நல்லிணக்க விழாவாக,ஒணம் இருக்கிறது என்றும் உலகமெங்கும் வாழும் மலையாள மக்களுக்குத் தமிழ் நாட்டின் சார்பாக எனது ஓணத்திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று வாழ்த்துத்தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Tags :