உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம்  கொரோனா தடுப்பூசி இறக்குமதி -முதல்வர் அறிவிப்பு

by Editor / 12-05-2021 06:45:30pm
உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம்  கொரோனா தடுப்பூசி இறக்குமதி -முதல்வர் அறிவிப்பு

 


தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
18 வயதுக்கு மேற்பட்டோருக்குச் செலுத்துவதற்குத் தடுப்பூசிகள் போதிய அளவில் இல்லாததால் தமிழக அரசே தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய முடிவெடுத்துள்ளது. 
தமிழகத்திற்கு மத்திய அரசு சுமார் 13 லட்சம் தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையில் இந்த ஒதுக்கீடானது 18 வயதிலிருந்து 45 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு போதிய அளவில் இல்லாததால் உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை நேரடியாக இறக்குமதி செய்து பயன்படுத்தத் தமிழக தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
 மேலும், குறுகிய காலத்தில் 18 வயதிலிருந்து 45 வயதினர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு முனைப்புடன் எடுக்கும் என்ற உத்தரவாதத்தையும் தமிழக அரசு கொடுத்திருக்கிறது.

 

Tags :

Share via