அதிமுக ஆட்சி மீண்டும் மலர அனைவரும் கைகோர்க்க வேண்டும்- சசிகலா கடிதம்.

by Staff / 30-08-2025 10:58:02am
அதிமுக ஆட்சி மீண்டும் மலர அனைவரும் கைகோர்க்க வேண்டும்- சசிகலா கடிதம்.

அதிமுக மீண்டும் ஒன்றிணைந்தால், 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவது உறுதி” என ச‌சிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், “தமிழக மக்கள் நலன் காக்க ஒன்றுபட்ட வலிமைமிக்க அதிமுக தான் ஒரே தீர்வு. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். திமுக வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் சூழலை நாம் உருவாக்கி விடக்கூடாது. 2021 தேர்தலுக்கு பின் நடைபெற்ற எந்த தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறவில்லை. இனியும் வேடிக்கை பார்க்க முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.
 

 

Tags : அதிமுக ஆட்சி மீண்டும் மலர அனைவரும் கைகோர்க்க வேண்டும்- சசிகலா கடிதம்.

Share via