நாட்டு வெடிகுண்டு வெடித்து 11 வயது சிறுவன் பலி

மேற்குவங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள பாண்டுவா பகுதியில் இன்று குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஒரு சிறுவன் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். சிறுவர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டை பந்து என நினைத்து விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென வெடித்து சிதறியது. இதில் ராஜ் பிஸ்வாஸ் (11) என்ற சிறுவன் உயிரிழந்தார். ரூபம் வல்லப் மற்றும் சௌரப் சவுத்ரி ஆகிய இரு சிறுவர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் ஒருவர் தனது வலது கையை இழந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags :