ஜாமீனில் வந்து சிறுமியை மீண்டும் பலாத்காரம் செய்ய முயற்சி

by Staff / 08-02-2024 12:26:27pm
ஜாமீனில் வந்து சிறுமியை மீண்டும் பலாத்காரம் செய்ய முயற்சி

பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த இளைஞர், அதே சிறுமியை மீண்டும் பலாத்காரம் செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் ஆலப்புழாவில் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த வள்ளிக்குன்னம் சலீம் (32) என்பவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். இவர் கடந்த செப்டம்பர் மாதம் சிறுமியை திருமணம் செய்வதாக கூறி பலாத்காரம் செய்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டு வாரங்களுக்கு முன்பு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த இவர், அதே சிறுமியை மீண்டும் பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார். இவர் பல குற்ற வழக்குகளில் குற்றவாளியாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

 

Tags :

Share via

More stories