முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு..

by Staff / 08-02-2024 12:21:38pm
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு..

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற  தேர்தல்  தொகுதி பங்கீடு  தொடர்பாக  கூட்டணி கட்சிகள் ஏற்கனவே ஆலோசனை  நடத்தி வரும் நிலையில்,,  மக்கள் நீதி மய்யமும் தி.மு.க கூட்டணியில்  இணையவுள்ளதாகவும்  முதலமைச்சர் மு..க..ஸ்டாலினுடன்  கமல்ஹாசன்  கூட்டணி  குறித்து பேச  வாய்ப்புள்ளதாகவும் கருத்து நிலவுகிறது.

சி.பி.ஐ, சி.பி.எம்,  ம..தி.மு.க , காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் ஏற்கனவே முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது.  வி.சி.க, ஐ.யூ.எம்.எல், கொ.ம.தே.க ஆகிய கட்சிகளுடன் வரும் 12 -ஆம் தேதி தி.மு.க பேச்சு வார்த்தை நடத்த உள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo