தென் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்

by Admin / 19-11-2025 01:12:29pm
தென் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமாரி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னையில் இன்று பகல் நேரங்களில் மழை சற்று குறைந்து ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆங்காங்கே மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் கனமழை செய்யக்கூடும் .. வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

 

Tags :

Share via