அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்......

by Staff / 01-09-2024 03:52:10pm
அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்......

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். 

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று அதிகாலை நான்கு முப்பது மணிக்கு அண்ணாமலையார் கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பஞ்சமுக தீபாராதனை நடைபெற்றது. 

விடுமுறை தினமான இன்று தமிழக மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளிமாநில பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். ராஜகோபுரம் மற்றும் அம்முனி அம்மன் கோபுரம் ஆகிய இரண்டு வழியாக பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு பேகோபுரம் மற்றும் திருமஞ்சன கோபுரம் ஆகிய இரண்டு வழியாக பக்தர்கள் வெளியே செல்ல கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via