எழுத்தாளர் சங்க தேர்தல்- பாக்யராஜ் வெற்றி

by Editor / 12-09-2022 08:52:50am
 எழுத்தாளர் சங்க தேர்தல்- பாக்யராஜ் வெற்றி

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று நடைபெற்றது. வடபழனி மியூசிக் யூனியனில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் பாக்யராஜ், எஸ்.ஏ. சந்திரசேகர் தலைமையிலான 2 அணிகள் போட்டியிட்டன.

இந்த தேர்தலில் பாக்யராஜ் 192 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். எஸ்.ஏ.சந்திரசேகர் 152 ஓட்டுகள் பெற்றார். 40 வாக்குகள் வித்தியாசத்தில் கே.பாக்யராஜ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via