தொண்டு நிறுவனம் சார்பில் விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் விருட்சம் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை அட்வகேட் மிரர் மாத இதழ் மற்றும் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் இணைந்து நடத்திய பல்துறை சாதனையாளர்கள் விருது 2025 வழங்கும் விழா சாம்பவர் வடகரை முருகம்மாள் மகாலில் வைத்து இனிதே சிறப்பாக நடைபெற்றது நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி சரகம் வனச்சரகர் பாலசுப்பிரமணியன்மற்றும் விருட்சம் அறக்கட்டளை நிறுவனர் வேல்சாமி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். வழக்கறிஞர் சுடலைமணி முன்னிலை வகித்து வரவேற்பபுரை ஆற்றினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சாம்பவர் வடகரை காவல் உதவி ஆய்வாளர் முத்துப்பாண்டி , தனிப்பிரிவு காவலர் ஸ்ரீதர் முதல் நிலை காவலர் பாலா மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் மாநில இணை பொது செயலாளர் நெய்னாமுகமது ஆகியோர் கலந்து கொண்டு பல்துறை சாதனையாளர் விருது விழாவிற்கு வருகை புரிந்த சாதனையாளர்கள் அனைவருக்கும் தங்களது பொற்கரங்களால் விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்கள். மேலும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.விழாவில் வழக்கறிஞரும் விருட்சம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருமான பார்த்திபன். சங்கர்,வெங்கடேஷ்,மாரிச்செல்வம் மதுரை சரவணன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஐயப்பன் பழனிக்குமார் என்ற முருகன் சமூக ஆர்வலர் கந்தசாமி,ஹரிஹர செல்வம் நெல்லை மண்டல செயலாளர் வசந்தன்,சந்திரன் கனிராஜ், தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவர் ரஜினி முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags : தொண்டு நிறுவனம் சார்பில் விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.