பிரவீன் சக்கரவர்த்தி - விஜய்யை சந்திப்பு. இது தேர்தல் கால ஒரு அரசியல் வியூகம் .

by Admin / 06-12-2025 07:58:07pm
 பிரவீன் சக்கரவர்த்தி - விஜய்யை சந்திப்பு. இது தேர்தல் கால ஒரு அரசியல் வியூகம் .

காங்கிரஸ் கட்சி முக்கிய பிரமுகர் ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பர் பிரவீன் சக்கரவர்த்தி நேற்று நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்யை சந்தித்து ஒரு மணி நேரம் பேசி உள்ளார். இது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 முன்னிட்டு காங்கிரஸ் கட்சி திமுக கூட்டத்தில் அதிக இடங்களை பெறுவதற்காக விஜய்யுடன் சந்திப்பு நிகழ்வை உருவாக்கி உள்ளதாகவும் அரசியல் அரங்கில் ஊகங்கள் எழுந்துள்ளன. இது குறித்து இன்று செய்தியாளர்கள் நாம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. செல்வப் பெருந்தகை விஜயுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெறுவதாக வெளியான தகவல்களை மறுத்து கூறியதோடு காங்கிரஸ் மேலிடம் ஏற்கனவே திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச ஒரு குழுவை அமைத்துள்ளதாகவும் காங்கிரஸ் திமுக கூட்டணியில் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பிரவீன் சக்கரவர்த்தியின் இன்று சந்திப்பு மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு தெரியாமல் நடந்த கூறப்படுவதால் உட்கட்சி ரீதியாகவும் திமுக கூட்டையிலும் சில குழப்பங்களை உருவாக்கியுள்ளது. இந்த சந்திப்பு குறித்து பிரவீன் சக்கரவர்த்தி வெளிப்படையாக இதுவரை தெரிவிக்கவில்லை என்றாலும் இது தேர்தல் கால ஒரு அரசியல் வியூகம் என்றே பார்க்கப்படுகிறது.

 பிரவீன் சக்கரவர்த்தி - விஜய்யை சந்திப்பு. இது தேர்தல் கால ஒரு அரசியல் வியூகம் .
 

Tags :

Share via