ஆன்லைன் வேலை எனக் கூறி வாலிபரிடம் 26 லட்சத்திற்கு மேல் மோசடி

by Staff / 26-09-2022 01:24:13pm
 ஆன்லைன் வேலை எனக் கூறி வாலிபரிடம் 26 லட்சத்திற்கு மேல் மோசடி

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்த 30 வயது வாலிபர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சொந்த ஊருக்கு வந்த இவர் ஆன்லைனில் வேலை தேடிக்கொண்டிருந்தார் சம்பவத்தன்று ஆன்லைன் பகுதி நேர வேலை இருப்பதாக இவருடைய டெலிகிராமில் குறுந்தகவல் வந்துள்ளது இதனை நம்பிய அவர் குறுந்தகவளில் இருந்த லிங்கை ஓபன் செய்துள்ளார் தாங்கள் கொடுக்கும் பணியை முடித்தால் குறிப்பிட்டத்தொகை கமிஷன் கொடுப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது அதன் பேரில் அந்த வாலிபர் அந்த பணியை செய்தார் அந்த வாலிபர் பணியை உடனே முடித்து விட்டதால் அவருடைய வங்கி கணக்கிற்கு குறிப்பிட்ட தொகை வந்துள்ளது பின்னர் சில நாட்கள் கழித்து மீண்டும் மற்றொரு வங்கி கணக்கிற்கு பணம் செலுத்துமாறு கூறியுள்ளனர் அவர் செலுத்திய உடனே மீண்டும் பணிக்கான தகவல் வந்துள்ளது. தொடர்ந்து இவ்வாறு செய்ததால் அவருக்கு பணி சம்பந்தமான தகவல்களை கொடுத்துள்ளனர் அந்த வாலிபர் அதில் முதலீடு செய்ய மீண்டும் குறிப்பிட்டத்தொகையை மர்ம நபர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். இதனால் மீண்டும் அவருக்கு தகவல்கள் கொடுக்கப்பட்டது ஆனால் அவர் செய்த பணிக்கான தொகை அவருடைய வங்கி கணக்கிற்கு வரவில்லை இது குறித்து கொடுக்கப்பட்ட செல்போனில் தொடர்பு கொண்டு அந்த நபரிடம் கேட்டபோது உங்களுக்கு கொடுக்கக்கூடிய டாஸ்கை தொடர்ந்து முழுவதையும் முடித்தால்தான் உங்களுக்கு பணம் வரும் என்று கூறியுள்ளனர் இதைத் தொடர்ந்து அந்த வாலிபர் தன்னுடைய வங்கி கணக்கிலிருந்து பலமுறை மர்ம நபர்கள் தெரிவித்த வங்கி கணக்கிற்கு ரூபாய் 26 லட்சத்து 79 ஆயிரத்து 542 ரூபாய் செலுத்தியுள்ளார் ஆனால் அவருக்கு எந்தவிதத்திலும் பணம் வந்து சேரவில்லை இது குறித்து அவர் பலமுறை கேட்டபோதும் கொடுத்த பணியை முழுவதும் முடித்தால்தான் பணம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இவ்வாறு தொடர்ந்து பணி செய்தும் பணம் வராததால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார் இது குறித்து அவர் தஞ்சை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார் அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via