தஞ்சையில் கேட்பாரற்றுக் கிடக்கும் 32 சடலங்கள்
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் அடையாளம் தெரியாத சடலங்கள் பெயர் தெரிந்த சடலங்கள் என 32 சடலங்கள் கடந்து சில மாதங்களாக உள்ளது. இதில் ஆறு பெண்கள் உடல்களும் இரண்டு குழந்தை உடல்களும் 24 ஆண்கள் உடல்களும் அடங்கும். இதில் 15 உடல்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி போலீஸ் நிலைய பகுதிக்கு உட்பட்டவை தஞ்சை மேற்கு போலீஸ் நிலைய பகுதியில் நான்கு உடல்களும் தஞ்சை தாலுகா பகுதிகளில் மூன்று உடல்களும் தஞ்சை கிழக்கு போலீஸ் நிலைய பகுதியில் இரண்டு உடல்களும் ஒரத்தநாடு புதுக்கோட்டை போலீஸ் நிலைய பகுதியை சேர்ந்த உடல்களும் அடங்கும். ஆனால் இந்த சடலங்களுக்கு இதுவரை யாரும் உரிமை கோரி வரவில்லை. இதையடுத்து இது தொடர்பாக நடத்தப்பட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்த சடலங்கலுக்கு யாரும் உரிமை கூறி வராத பட்சத்தில் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் மூலம் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்பு குழு மூலம் நல்லடக்கம் செய்யப்படும் என்று தஞ்சை மருத்துவக் கல்லூரி முதல்வர் மருதுதுறை விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Tags :