விஜயை சந்தித்து நாஞ்சில் சம்பத் தமிழக வெற்றிக்கழகத்தில் தன்னை ஐக்கிய படுத்திக் கொண்டார்.
திமுகவிலிருந்து வைகோ பிரிந்த பொழுது அவரோடு சேர்ந்து மறுமலர்ச்சி திமுகவில் தன்னை இணைத்துக் கொண்ட நாஞ்சில் சம்பத் பல ஆண்டுகள் வைகோவின் நிழலாகவே அரசியல் உலா வந்தார். பின்னர் இருவர்களுக்கு பின்னர் இருவருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சசிகலா பக்கம் சாய்ந்தார். அவர் சிறைக்கு சென்ற பொழுது நமக்கு வழங்கப்பட்டிருந்த காரை சசிகலா வீட்டில் விட்டுவிட்டு வெளியேறினார். சின்ன பல காலம் எந்த கட்சியிலும் இல்லாமல் தம் கருத்துக்களை மட்டுமே சொல்லி வந்தவர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திமுகவின் ஆதரவு கருத்துக்களை பொது வழியில் பேசி வந்தவர் மதிமுகவிலிருந்து மல்லை சத்தியா நீக்கப்பட்ட பிறகு அவர் உருவாக்கிய திராவிட வெற்றிக் கழகத்தில் இணைந்து செயலாற்ற உள்ளதாக செய்தி வந்த நிலையில் நேற்று திடீரென்று விஜயை சந்தித்து அவருடைய தமிழக வெற்றிக்கழகத்தில் தன்னை ஐக்கிய படுத்திக் கொண்டார். அவருக்கு விஜய் பரப்புரை செயலாளர் என்கிற பதவியை வழங்கி அவருடைய அனுபவம் தம் கழகத்திற்கு மிகுந்த பலனளிக்கும் என்று சொல்லி உள்ளார்.
Tags :


















