செங்கோட்டையில் வீர வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

by Staff / 17-06-2024 01:47:43pm
செங்கோட்டையில் வீர வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

இந்திய சுதந்திர போராட்ட தியாகி வீர வாஞ்சிநாதன் மணியாச்சி ரயில் நிலையத்தில் அன்றே ஆங்கிலேய ஆட்சித் தலைவர் ஆஷ்யை சுட்டு கொன்றுவிட்டு தானும் களச் சாவு அடைந்தார். இன்று வீர வாஞ்சிநாதன் அவர்களின் 113-வது நினைவு நாளினை முன்னிட்டு  தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சிமுத்துசுவாமி பூங்கா வளாகத்தில்   உள்ள  மணிமண்டபத்தில் அன்னாரது திருவுருவ சிலைக்கு  மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர்  காலை 10 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். .அவரது தம்பி மகன் வாரிசு ஹரிஹர சுப்பிரமணியன் மற்றும் பேரன் கோபாலகிருஷ்ணன் வாஞ்சி கோபாலகிருஷ்ணன் மற்றும் தியாகிகள் வாரிசுகள் கைலாசநாதன் இசக்கி முத்து தர்மராஜன் வாஞ்சி இயக்க மாவட்ட தலைவர் ராமநாதன் செங்கோட்டை நகர மன்ற தலைவர் ராமலட்சுமி முன்னாள் நகர்மன்ற தலைவர் ரஹீம் நகர செயலாளர்வழக்கறிஞர் வெங்கடேசன் சமூக ஆர்வலர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் திரண்டு வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

Tags :

Share via

More stories