செங்கோட்டையன்எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்த உடன் ,விஜய்யோடு கைகோர்க்க உள்ளார் என்று தகவல்..

by Admin / 25-11-2025 11:05:41pm
செங்கோட்டையன்எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்த உடன் ,விஜய்யோடு கைகோர்க்க உள்ளார் என்று தகவல்..

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் வரும் 27ஆம் தேதி விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.. அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா., அம்மா முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரை தேவர் ஜெயந்தி  அன்றுசந்தித்து பேசியதினால் அதிமுகவில் இருந்து பொறுப்புகள் பறிக்கப்பட்டு  கட்சியை விட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீக்கினார்.. இதன் பின்னர் அமைதியாக இருந்து வந்த செங்கோட்டையன் ஒருங்கிணைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் விரைவில் நல்ல முடிவு ஏற்படும் என்று கூறி வந்த நிலையில், தற்போது தம் எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்த உடன் ,விஜய்யோடு கைகோர்க்க உள்ளார்.என்றும் இவரைத் தொடர்ந்து அதிமுகவிலிருந்து வெளியேறிய முக்கிய தலைவர்கள் ஓ பன்னீர்செல்வம் உள்பட பலர் தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாகவும் தகவல்..

 

Tags :

Share via

More stories