வயிறு வளர்க்கத்தான் காவல்துறையும், அரசும் இருக்கிறதா..? இயக்குநர் லெனின் பாரதி.

by Editor / 20-06-2024 09:57:16am
வயிறு வளர்க்கத்தான் காவல்துறையும், அரசும் இருக்கிறதா..? இயக்குநர் லெனின் பாரதி.

மாமூல் வாங்கித் தின்று வயிறு வளர்க்கத்தான் காவல்துறையும், அரசும் இருக்கிறதா? என 'மேற்குத்தொடர்சி மலை' திரைப்படத்தின் இயக்குநர் லெனின் பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச் சாராயம் குடித்து 33 பேர் உயிரிழந்த நிலையில், இது குறித்து எக்ஸ் தளத்தில் லெனின் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், கடந்த ஆண்டு கள்ளச்சாராயத்திற்கு செங்கல்பட்டு, விழுப்புரம் என 33 பேருக்கு மேல் பலி. வருடந்தோறும் இப்படி மக்களை பலிகொடுத்து மாமூல் வாங்கித் தின்று வயிறு வளர்க்கத்தான் காவல்துறையும், அரசும் இருக்கிறதா..? என சாடியுள்ளார்.

 

Tags : வயிறு வளர்க்கத்தான் காவல்துறையும், அரசும் இருக்கிறதா..? இயக்குநர் லெனின் பாரதி.

Share via