ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை - அரசை சாடிய நடிகை நமிதா

விழுப்புரத்தில் திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட நடிகை நமிதா ரூ.1000 திட்டம் தொடர்பாக தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். தமிழக அரசு கார், பைக் இருந்தால் ரூ.1000 தர முடியாது என்று கூறுகிறார்கள், இந்த காலத்தில் எந்த வீட்டில் பைக் இல்லாமல் இருக்கிறது. அனைவருக்கும் பணம் தருகிறோம் என்று ஆட்சிக்கு வந்துவிட்டு, இப்போது தகுதி இருந்தால்தான் தொகை என்று கூறுவதை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த அவலங்களுக்கு முடிவு கட்ட தமிழகத்தில் தாமரை மலர வேண்டும் என்றார்.
Tags :