பழனி முருகன் கோயிலில்  ரோப் கார் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது. 

by Editor / 08-10-2023 10:07:00am
பழனி முருகன் கோயிலில்  ரோப் கார் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது. 

பழனி முருகன் கோயிலில் பராமரிப்பு பணிகளுக்காக பழனி மலை கோயில் ரோப் கார் 50 நாட்கள் வருடாந்திர பராமரிப்புக்கு பிறகு இன்று முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. நிறுத்தப்பட்ட ரோப் கார் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது. ரோப் காரில் பெட்டிகள், இரும்பு சக்கரங்கள், கம்பி வடம் உள்ளிட்டவை மாற்றப்பட்டு கடந்த இரு தினங்களாக சோதனை ஓட்டம் நடைபெற்றது. விடுமுறை தினம் என்பதால் பழனி முருகன் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து வந்துள்ள பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

 

Tags : பழனி முருகன் கோயிலில்  ரோப் கார் சேவை மீண்டும் தொடங்கியது. 

Share via

More stories