முற்றிலும் கணினி மயமாகும் தலைமைச் செயலகம்... ரூ.13 கோடி நிதி ஒதுக்கீடு!

by Admin / 26-08-2021 02:45:44pm
முற்றிலும் கணினி மயமாகும் தலைமைச் செயலகம்... ரூ.13 கோடி நிதி ஒதுக்கீடு!

 

முற்றிலும் கணினி மயமாகும் தலைமைச் செயலகம் அமைக்க 13 கோடி  ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியீடப்பட்டுள்ளது.  
 
தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்து துறைகளையும் இ- அலுகலகம் ( e - Office ) ஆக மாற்றுவதற்கு தேவையான நிதியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை முதன்முறையாக டிஜிட்டல் பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.  படிப்படியாக அரசு கோப்புகள் அனைத்தும் கணினி மயமாக்கப்படும் எனவும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது

.இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்து துறைகளையும் டிஜிட்டல் மயமாக்கும் வகையில் ரூ.13 கோடியே 44 லட்சம் ஒதுக்கீடு செய்வதற்கான நிர்வாக அனுமதி மற்றும் நிதியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

அனைத்து அரசு உழியர்களுக்கும் Login செய்யும் வசதி, 24 மணி நேரமும் இணைய வசதி, டிஜிட்டல் முறையிலே கோப்புகள் சரிபார்ப்பு மற்றும் உயர் அதிகாரிகளின் கையொப்பம், உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த திட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்படுகிறது. கோப்புகளின் தற்போதய நிலையை கண்டறிவதற்கும், அதற்கு உடனடியாக தீர்வு காண்பதற்கும் உதவியாக இருக்கும் என்பதால் 1100 கணினிகள் தலா 60 ஆயிரம் மதிப்பில் வாங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

 

Tags :

Share via