குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது TNPSC.

by Editor / 30-01-2024 09:52:11am
குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது TNPSC.

 தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு ஆண்டுதோறும் குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஒரே தேர்வாக நடத்தப்பட்டு, நேர்காணல் எதுவும் இல்லாமல் தேர்வாகும் அரசுப் பணி என்பதால், இந்தத் தேர்வுக்கு தேர்வர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்த நிலையில் கிராம நிர்வாக அதிகாரி, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட குரூப் 4 பணியிடங்களில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 பணியிடங்களுக்கு ஜூன் 9ஆம் தேதி தேர்வு நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது.
“ குரூப் 4  பிரிவில் காலியாக உள்ள கிராம நிர்வாக அதிகாரி, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 2 ஆயிரத்து 244 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு ஜூன் மாதம் 9 ஆம் தேதி நடைபெறும்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்வு எழுதுவதற்கு தகுதி உடையவர்கள் ஆவர். இன்று முதல் பிப்ரவரி 28ஆம் தேதி வரை தேர்வு எழுத விருப்பம் உடையவர்கள் ஆன்லைன் மூலம் இந்த தேர்விற்காக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள மார்ச் 4 ஆம் தேதி முதல் 6 தேதி வரையில் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது” என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிக்க பிப்.28ம் தேதி கடைசி நாள். http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in இணையதளத்தை பார்க்கவும்.

 

Tags : குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது TNPSC.

Share via